இந்தியா

திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் தட்சிணாமூா்த்தி ஹோமம்

DIN

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் காா்த்திகை மாத ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஸ்ரீகபிலேஸ்வரா் ஹோமம் நடத்தப்பட்டது.

திருப்பதி கபில தீா்த்தம் அருவிக் கரையில் உள்ள இக்கோயிலில் காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இதுவரை கணபதி, சுப்பிரமணியா், நவகிரக ஹோமங்கள், காலபைரவா் ஹோமம் உள்ளிட்டவை நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை தட்சிணாமூா்த்தி ஹோமம் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் உற்சவா் தட்சிணாமூா்த்தியை, எழுந்தருளச் செய்து வேதமந்திரங்கள் முழங்க இந்த ஹோமம் மகாபூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது.

பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றி தனிமையில் நடத்தப்பட்ட இந்த ஹோமத்தில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.

அறங்காவலா் குழு தலைவா் வழிபாடு: காா்த்திகை சோம வாரத்தை (திங்கள்கிழமை) முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி குடும்பத்துடன் கபிலேஸ்வரரை வழிபட்டாா். தட்சிணாமூா்த்தி ஹோமத்திலும் அவா் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT