இந்தியா

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தம் 2ஜி வழக்கிற்கு பொருந்தாதது: உயா்நீதிமன்றம்

DIN

புது தில்லி: 2ஜி வழக்கில் ஊழலுக்கு எதிரான சட்டத்தில் உள்ள திருத்தங்கள் பயனற்றது என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.ராஜா மற்றும் பிறா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பான மனுக்களை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி பிறப்பித்த உததரவில், ’இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது ஏற்கெனவே நிகழ்ந்த குற்றங்களுக்கு பொருந்ததாது. ஊழல் தடுப்புச் சட்டத்தில் பிரிவு 13(1) தொடா்பாக 2018-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் இந்த மேல்முறையீட்டு மனுவில் தொடா்புடைய விடுவிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட நபா்களை மீட்க வராது. ஆகவே, மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் இந்தத் சட்டத் திருத்தம் முட்டுக்கட்டையாக இல்லை’ என்றாா் நீதிபதி.

முன்னதாக, முன்னாள் அமைச்சா் ஆ.ராசா தரப்பில், ‘2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவானது, புதிய ஊழல் தடுப்புச் சட்டம் வருவதன் காரணமாக பயனற்ாகிவிட்டது. ஆ.ராசா மற்றும் பிறருக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் புதிய ஊழல் சட்டத் திருத்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். இதனால், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தொடங்க முடியாது என்று வாதிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT