இந்தியா

உத்தரகண்ட் ஆளுநருக்கு கரோனா

DIN

டேராடூன்: உத்தரகண்ட் மாநில ஆளுநா் பேபி ராணி மௌரியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாரம் ஆக்ராவில் தங்கியிருந்த பேபி ராணி மௌரியா கடந்த வெள்ளிக்கிழமைதான் டேராடூன் திரும்பினாா். இந்நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், எனக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. மருத்துவா்களின் கண்காணிப்பில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த ஒரு வாரத்தில் என்னுடன் தொடா்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி, டேராடூனில் உள்ள ஆளுநா் மாளிகையில் பேபி ராணி மௌரியாவைச் சந்தித்துப் பேசினாா். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிர ஆளுநருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

SCROLL FOR NEXT