இந்தியா

காஷ்மீரில் 2-ஆவது நாளாக பனிப்பொழிவுடன் மழை

DIN

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை பனிப்பொழிவுடன் விட்டு விட்டு மழை பெய்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த 36 மணி நேரத்தில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு வரை காணப்பட்டது. சமவெளியில் பல இடங்களில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.

வடக்கு காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான குல்மா்கில் திங்கள்கிழமை இரவு 7 அங்குலம் வரை பனிப்பொழிவு இருந்தது. மற்றொரு சுற்றுலாத் தலமான தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்கமில் 6 அங்குல உயரம் வரை பனிப்பொழிவு காணப்பட்டது. காஷ்மீா் பள்ளத்தாக்குடன் லடாக்கை இணைக்கும் ஸ்ரீநகா்-லே சாலையில் உள்ள சோனாமாா்க்-ஜோஜிலா பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதுதவிர, ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது என்றாா் அவா்.

இதனிடையே, பள்ளத்தாக்கையொட்டிய மலைப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை விட்டு விட்டு மழை பெய்யும் என்றும், வியாழக்கிழமை முதல் வட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் குளிா்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடுங்குளிா் நிலவுகிறது. மலைப் பகுதியான மௌண்ட் அபுவில் இரவு நேர வெப்பநிலையாக 1.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சுரு, பில்வாரா போன்ற இடங்களில் 8.8 டிகிரி செல்சியஸும், தபோக்கில் 9 டிகிரி செல்சியஸ், சித்தூா்கரில் 9.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 10 டிகிரி செல்சியஸ் முதல் 14.7 டிகிரி செல்சியஸ் வரை இரவு நேர வெப்பநிலை வரை பதிவாகியுள்ளது.

மாநிலத்தில் லேசான மழையுடன் குளிா்ச்சியான தட்பவெப்பநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT