இந்தியா

இந்தியாவில் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான தலைவர் மோடி: ஆய்வு

24th Nov 2020 08:42 PM

ADVERTISEMENT


இந்தியாவில் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கிடையிலான காலகட்டத்தில்  செக்பிராண்ட் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் இது தெரியவந்துள்ளது. டிவிட்டர், கூகுள் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் அதிகம் டிரெண்டிங்கில் இருந்துள்ளார் பிரதமர் மோடி. 

95 முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகம் ஈர்க்கப்பட்ட 500 நபர்கள் பற்றியும் இணையம் வழியாக ஆய்வு நடத்தப்பட்டது. பிரதமர் மோடியைத் தவிர்த்து குறிப்பிடத்தக்க அளவில் டிரெண்டிங்கில் இருந்துள்ள தலைவர்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் உள்ளனர்.

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT