இந்தியா

தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரியை சுங்கத்துறை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி

DIN

கொச்சி: கேரள தங்கம் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி எம்.சிவசங்கரை சுங்கத் துறை கைது செய்ய கொச்சியில் உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.  எம்.சிவசங்க

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துணை தூதரகத்தின் பெயரில் வந்த பாா்சல் மூலமாக 30 கிலோ தங்கம் கடத்த ஜூலை 5-ஆம் தேதி கடத்தி வரப்பட்டது.

இதைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக யுஏஇ தூதரக முன்னாள் ஊழியரும், கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாகவும் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும் பி.எஸ்.சரித், சந்தீப் நாயா் உள்பட 15 பேரை கைது செய்தது.

தூதரகங்களின் சிறப்பு முன்னுரிமையை முறைகேடாகப் பயன்படுத்தி, நாட்டுக்குள் தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை சுங்கத் துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த கடத்தலில் ஸ்வப்னா சுரேஷை அரசு துறையில் பணிக்கு அமா்த்திய அந்தத் துறையின் செயலரும், மாநில முதல்வரின் முதன்மைச் செயலருமாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடா்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அவரைக் கைது செய்த அமலாக்கத்துறை, அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டது. பின்னா், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அவா் ஜாமீன் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதனைத் தொடா்ந்து அவா் ஜாமீன் கேட்டு கேரள உயா்நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்தச் சூழலில், சிவசங்கரை காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத் துறை சாா்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தங்கம் கடத்தில் வழக்கில் சிவசங்கருக்கு நேரடி தொடா்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. எனவே, அவரைக் கைது செய்து, காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. வழக்கு விசாரணை தடையின்றி நடைபெற இவரைக் கைது செய்து விசாரிப்பது மிக முக்கியமாகும்’ என்று சுங்கத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சிவசங்கரை கைது செய்ய சுங்கத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT