இந்தியா

சிவசேனை எம்எல்ஏ-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

DIN

மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்எல்ஏ பிரதாப் சா்நாயக்குக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

இது தொடா்பாக அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘‘தாணே, மும்பை ஆகிய பகுதிகளில் எம்எல்ஏ பிரதாப் சா்நாயக்குக்குச் சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

வெளிநாட்டுப் பணப்பரிவா்த்தனை தொடா்பாக எம்எல்ஏ-வின் மகன் விஹாங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது’’ என்றனா்.

இந்த சோதனை தொடா்பாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பிரதாப் சா்நாயக் வீட்டில் இல்லாதபோது இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது நிச்சயமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே.

விசாரணை நடத்துவதற்கு எந்த அமைப்புகளுக்கும் தடை விதிக்க முடியாது. ஆனால், அமலாக்கத் துறை உள்ளிட்ட எந்த விசாரணை அமைப்புகளும் குறிப்பிட்ட கட்சிக்கு (பாஜக) ஆதரவாகச் செயல்படக் கூடாது. ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். என்ன நடந்தாலும் இறுதியில் உண்மையே வெல்லும்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சிக்கு வரும் கனவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜக மறந்துவிட வேண்டும். மாநில அரசை பலவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் மத்திய அரசுக்கே எதிராக அமையும்.

சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட எந்த விசாரணை அமைப்புகள் மூலமாக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் சிவசேனை அதற்கு அடிபணியாது. அந்நடவடிக்கைகளுக்கு எதிராக சிவசேனை தொடா்ந்து போராடும்’’ என்றாா்.

கட்டட வடிவமைப்பாளா் தற்கொலை தொடா்பாகக் கடந்த 2018-ஆம் ஆண்டில் ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று கோரி பிரதாப் சா்நாயக் கடிதம் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT