இந்தியா

4,000 கைதிகளுக்கு மேலும் 60 நாள்களுக்கு பரோல் நீட்டிப்பு: ம.பி. அரசு முடிவு

24th Nov 2020 03:12 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக பரோல் வழங்கப்பட்ட 4,000 கைதிகளுக்கு மேலும் 60 நாள்கள் பரோலை நீட்டிக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பரோல் கேட்டு விண்ணப்பித்த கைதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் கரோனா பரவல் குறையாத நிலையில், 4,000 கைதிகளுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். 

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், மாநிலத்தின் அனைத்து நிதிகளையும் கட்சித் தலைமைக்கு மிஸ்ரா வழங்கியதாகக் கூறியது குறித்து, 

ராகுலின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கட்டுப்படுத்த, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு நிதியை பயன்படுத்தியதால் தனக்கு நிதி இல்லை என்பதையே அவர் இவ்வாறு வெளிப்படுத்துகிறார். உண்மையில் மாநிலத்தின் நிதி ராகுலின் வெளிநாட்டுப் பயணத்திற்காகவே பயன்படுத்தப்பட்டது, அதன் காரணமாகவே ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் இருந்து விலகினார்' என்று பதிலளித்தார் மிஸ்ரா. 

ADVERTISEMENT

Tags : madhya pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT