இந்தியா

ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கரோனா பாதிப்பு

23rd Nov 2020 12:46 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெஹ்லோட் தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் சுட்டுரையில் கூறியதாவது, 

டாக்டர். ரகு சர்மா ஜி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

மேலும், அவருடன் சமீபத்தில் தொடர்பு கொண்டவர்கள் தங்களைப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

கரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்ததும். என்னை சோதனைக்கு உட்படுத்தினேன், அதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தயவு செய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், கரோனா பரிசோதனையை செய்துகொள்ளுமாறு சர்மா தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT