இந்தியா

மகாராஷ்டிரம் வருவோருக்கு புதியக் கட்டுப்பாடுகள்

23rd Nov 2020 06:03 PM

ADVERTISEMENT


தில்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலிருந்து தங்கள் மாநிலத்துக்கு வருவோர், கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தில்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவாவில் இருந்து மகாராஷ்டிரம் வரும் பொதுமக்கள், கரோனா பரிசோதனை செய்து கொண்டு, தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று தீவிரமாக இருந்த மகாராஷ்டிர மாநிலம், தற்போது தொற்று பாதிப்பைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT