இந்தியா

வேலையின்மையின் தலைநகராக பிகார்: தேஜஸ்வி யாதவ்

23rd Nov 2020 04:22 PM

ADVERTISEMENT


நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாநிலம் மாறியுள்ளதாக பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி பிகார் பேரவை வெளியே திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

"நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாறியுள்ளது. பொது மக்களால் இனியும் காத்திருக்க முடியாது. ஆளும் கூட்டணியால் முதல் மாதத்தில் 19 லட்ச வேலைகளை வழங்க முடியாவிட்டால், மாநிலம் முழுவதும் பொது மக்களின் போராட்டத்தில் நாங்கள் பங்கெடுப்போம்."

அண்மையில் நடந்து முடிந்த பிகார் பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிகப்படியான தொகுதிகளில் வென்றது.

ADVERTISEMENT

Tags : Tejashwi
ADVERTISEMENT
ADVERTISEMENT