இந்தியா

தில்லி மருத்துவமனைகளில் கரோனா படுக்கை வசதி அதிகரிப்பு: அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

22nd Nov 2020 04:36 PM

ADVERTISEMENT

தில்லி மருத்துவமனைகளில் கரோனா படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தலைநகா் தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவகிறது. நேற்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,23,117 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,963 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 111 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,75,106 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 8,270 பேர் பலியாகியுள்ளனர். 39,741 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பண்டிகைக் காலம் மற்றும் குளிா்காலம் தொடங்கியிருப்பதால் நாள் ஒன்றுக்கு 15,000 போ் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அதற்கேற்ப மருத்துவ நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தில்லி அரசை தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அண்மையில் எச்சரித்தது. இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். 

தில்லியில் 17,292 கரோனா படுக்கைகள் உள்ளன, அவற்றில் 7,700 படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன. தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ) படுக்கைகளும் 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளன, வரும் நாள்களில் மேலும் சேர்க்கப்படும். தனியார் மருத்துவமனைகளிலும் சுமார் 250 ஐ.சி.யூ படுக்கைகள் அதிகரிக்கப்படும்” என்று ஜெயின் கூறினார்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT