இந்தியா

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 5,254 பேருக்கு கரோனா

22nd Nov 2020 07:20 PM

ADVERTISEMENT

கேரளத்தில் இன்று ஒரே நாளில் 5,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு தற்போது 65,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 27 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,049 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 6,227 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,94,664 ஆக உயர்ந்துள்ளது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT