இந்தியா

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

22nd Nov 2020 11:50 AM

ADVERTISEMENT

உன்னாவ்: உத்தரப்பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். 

தில்லியிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை நோக்கி நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டது.

82 பயணிகளுடன் உத்தரப்பிரதேசத்தின் சிர்தார்பூர் அருகே வந்துகொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 20 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக தகவல் அறிந்து விரைந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுகாயமடைந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு  மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT