இந்தியா

‘கரோனா தடுப்பு நடவடிக்கையில் தில்லிக்கு உதவத் தயார்’: பஞ்சாப் முதல்வர்

21st Nov 2020 06:23 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் தில்லிக்கு உதவத் தயாராக இருப்பதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தில்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தில்லி அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக சனிக்கிழமை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் கரோனா நோய்த்தொற்றால் பிற மாநிலங்களில்  பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT