இந்தியா

பஞ்சாப்: 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்

21st Nov 2020 04:53 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் நவம்பர் 23-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில விவசயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வரும் பாரத் கிசான் யூனியன், உள்ளிட்ட விவசாய அமைப்புகளுக்கு பேச்சுவார்த்தைக்காக முதல்வர் அழைப்பு விடுத்தார்.

ADVERTISEMENT

அதன்படி சண்டிகரில் உள்ள கிசான் பவனில் இன்று (சனிக்கிழமை) விவசாய சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து நவம்பர் 23-ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் பேசிய முதல்வர் அமரீந்தர் சிங்,  ''நவம்பர் 23ஆம் தேதி இரவு முதல் 15 நாள்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நான் வரவேற்கிறேன். மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இதன் மூலம் சரிசெய்யப்படும். மத்திய அரசு உடனடியாக பஞ்சாபில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பேசிய பாரத் கிசான் யூனியன் அமைப்பினர், ''வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு 15 நாள்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என்று கூறினர்.

Tags : punjab
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT