இந்தியா

போதை கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி

21st Nov 2020 05:31 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் போதை கும்பல்களுக்கு எதிராக மாநில அரசு தயங்குவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர்,“ உ.பி.யில், லக்னோ, ஃபிரோசாபாத், ஹப்பூர், மதுரா, பிரயாகராஜ் உள்ளிட்ட பல இடங்களில் மதுபானம் காரணமாக இறப்பு ஏற்பட்டுள்ளது. மீரட்டின் ஆக்ரா, பாக்பத் நகரில் மதுபானம் காரணமாக இறப்பு ஏற்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், “மதுபான கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு தவறியதற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Priyanka gnadhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT