இந்தியா

உ.பி.: கிராமப்புற குடிநீர் இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

20th Nov 2020 04:27 PM

ADVERTISEMENT

தில்லி: உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புற குடிநீர் இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மிர்சாபூர், சோன்பாத்ரா ஆகிய மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து, கிராமப்புற நீர் மற்றும் சுகாதாரக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலக அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''இரண்டு மாவட்டத்திலும் உள்ள 2,995 கிராமங்களிலுள்ள 42 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

குடிநீர் வழங்கல் திட்டத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக அந்தந்தப் பகுதிகளில் கிராமப்புற நீர் மற்றும் சுகாதாரக்குழு அமைக்கப்படும். 

ADVERTISEMENT

ரூ.5555.38 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த குடிநீர் வழங்கல் திட்டம் அடுத்த 24 மாதங்களில் முடிக்கப்படும். 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். 

ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 'ஜல் ஜீவன் மிஷன்'  திட்டத்தின் கீழ் இந்த குடிநீர் வழங்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 'ஜல் ஜீவன் மிஷன்'  திட்டத்தின் கீழ் 18.93 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை  3.23 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15.70 கோடி கிராமப்புற வீடுகளுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT