இந்தியா

உ.பி. சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர்

20th Nov 2020 11:46 AM

ADVERTISEMENT


UP CM condoles loss of lives in Pratapgarh road accident, announces Rs 2 lakh compensation for kin

உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கர் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

பிரதாப்கர் அருகே பிரயாக்ராஜ்-லக்னௌ நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 

பிரதாப்கர் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், சாலை விபத்து குறித்து முதல்வர் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

Tags : road accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT