இந்தியா

ஹரியாணாவில் நவ.30 வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிப்பு

20th Nov 2020 03:52 PM

ADVERTISEMENT

ஹரியாணா மாநிலத்தில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் நவம்பர் 30ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாள்களுக்குள்ளாகவே மாநிலம் முழுவதும் பல்வேறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை 83 மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக பள்ளிகளை மீண்டும் மூடுவதற்கான அறிவிப்பை மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Haryana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT