இந்தியா

போலியோ ஒழிப்பில் தனியார் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றின: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்

20th Nov 2020 09:17 PM

ADVERTISEMENT

போலியோ ஒழிப்பில் தனியார் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றின என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

சிஐஐ நடத்திய ஆசிய சுகாதார மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டு ஹர்ஷ வர்தன் பேசியதாவது: இந்திய சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் வேலைவாய்ப்பில் மிகப் பெரிய துறை. இதன் சந்தை மதிப்பு 2022-ஆம் ஆண்டுக்குள் 3 மடங்கு உயர்ந்து ரூ.8.6 டிரில்லியனாக அதிகரிக்கவுள்ளது. சுகாதார சேவை அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்பதை கரோனா பாதிப்பு உணர்த்தியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், அனைத்து மக்களுக்கும் மலிவான சுகாதார சேவை கிடைக்க வழி செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை, கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு மட்டும் சுகாதாரத்துறை பயன்படுத்தவில்லை. கரோனா அல்லாத அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தத்பட்டுள்ளது. 

தொலைதூர மருத்துவ ஆலோசனை பெறும் இ-சஞ்சீவனி திட்டத்தில் இன்று வரை 8 லட்சம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பு முக்கியமானது. தனிநபர் பாதுகாப்பு உடைகளை நாம் அதிகளவில் உற்பத்தி செய்கிறோம். மருத்துவ மாதிரிகளை முன்பு பரிசோதனை செய்ய அட்லாண்டாவுக்கு அனுப்பினோம். 

ADVERTISEMENT

தற்போது, இங்குள்ள தனியார் பரிசோதனைக் கூடங்களிலேயே பரிசோதனைகள் நடக்கின்றன. போலியோ ஒழிப்பில் தனியார் நிறுவனங்கள் மிகப் பெரிய பங்காற்றின. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Harsh Vardhan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT