இந்தியா

கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி அதிவேகத்தில் நடக்கிறது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 

20th Nov 2020 08:04 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி அதிவேகமாக நடக்கிறது என ஆசிய சுகாதார மாநாட்டில் மத்திய வர்த்தக மற்றம் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய ஆசிய சுகாதாரம் 2020 மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சுகாதார பணியாளர்களின் தியாகம் வீண் போகாது. நம் நாட்டில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி அதி வேகத்தில் நடக்கிறது. தடுப்பூசி கிடைக்கும் வரை, கரோனா தொற்று பற்றி நாம் அலட்சியமாக இருக்க முடியாது என பிரதமர் கூறியுள்ளார்.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பை வரலாறு நினைவு கூறும். இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உதவியது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஏழை நாடுகள் உட்பட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கரோனா தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் மலிவான மற்றும் புதுமையான சுகாதார தீர்வுகளை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT