இந்தியா

பாகிஸ்தானில் இன்று மேலும் 2,500 பேருக்கு கரோனா

20th Nov 2020 02:41 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,500 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து அந்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,65,927 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைப் பலனளிக்காமல் இதுவரை மொத்தம் 7,248 பேர் பலியாகியுள்ளனர். மேலும், தொற்றில் இருந்து மொத்தமாக 3,26,674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

பாகிஸ்தான் மருத்துவ சங்கம் (பி.எம்.ஏ) ஏற்கனவே கரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமென எச்சரிக்கை விடுத்ததுடன், நெறிமுறைகளை பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT