ஒடிசாவில் அடுத்தாண்டு புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் கட்டடத்தை இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்கவும், அடுத்த கல்வியமர்வில் இருந்து சேர்க்கை தொடங்கத் தேவையான அனுமதியை மருத்துவ கவுன்சிலுக்கு நகர்த்தவும் அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மூன்று திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்யும் போது தலைமைச் செயலர் ஏ.கே.திரிபாதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தல்ச்சர், சுந்தர்கர் மற்றும் பூரி ஆகிய மூன்று இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானத்தை தற்போது அரசு மேற்கொண்டுள்ளது.
மகாநதி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - தல்ச்சர், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை - சுந்தர்கர் மற்றும் ஜெகந்நாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பூரி ஆகிய கல்லூரிகளில் தலா 100 இடங்களைக் கொண்ட எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்களைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.