இந்தியா

தில்லியில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.4.98 லட்சம் அபராதமாக வசூல்

20th Nov 2020 03:32 PM

ADVERTISEMENT

தில்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை உயர்த்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 984 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 2110 பேரிடமிருந்து மொத்தம் ரூ.4,98,984 அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பியதற்காக 3368 பேருக்கும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத குற்றத்திற்காக 37,774 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT