இந்தியா

'கோவாக்சின்' தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஹரியாணா அமைச்சர்!

20th Nov 2020 05:29 PM

ADVERTISEMENT

ஹரியாணாவில் 'கோவாக்சின்' தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியான 'கோவாக்சின்' நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் இருந்து வருகிறது. 

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஹரியாணா மாநிலத்தில் மூன்றாம் கட்ட 'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கியது. அம்பாலா மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வில் முதல் தன்னார்வலராக மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்தியா முழுவதும் 3 ஆம் கட்ட பரிசோதனையில் மொத்தம் 25 மையங்களில் 26,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : ஹரியாணா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT