இந்தியா

தங்கம் கடத்தல் வழக்கு: ஜாமீன் கோரி சிவசங்கர் மனு தாக்கல்

20th Nov 2020 01:04 PM

ADVERTISEMENT

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கொச்சி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்திற்கு தங்கம் கடத்தி வந்ததாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடர்புடையதாக தூதரக ஊழியர்கள் உள்பட பலரை கைது செய்தனர்.

ADVERTISEMENT

தங்கம் கடத்தல் வழக்கில் உதவியதாக முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கரையும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தற்போது சிவசங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு முன்பு எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் சிவசங்கரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT