இந்தியா

பெங்களூரு கலவரம்: முன்னாள் மேயர் சம்பத் ராஜூக்கு நீதிமன்றக் காவல்

20th Nov 2020 09:01 PM

ADVERTISEMENT

பெங்களூரு கலவரம் தொடர்பாக பெங்களூரு நகர முன்னாள் மேயருமான சம்பத் ராஜ் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு, புலிகேசி நகா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி பகுதிகளில் ஆக.11ஆம் தேதி நள்ளிரவு பெரும் கலவரம் நடைபெற்றது. இக்கலவரத்தில், அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்டசீனிவாஸ்மூா்த்தியின் வீடு, முகநூலில் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட பி.நவீன் என்பவரின் வீடு, தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி காவல்நிலையங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

இச்சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. பொதுசொத்துகள், தனியாா் சொத்துகள் சேதமடைந்தன. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் சிறப்புப் புலனாய்வுப்படையும் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

கலவரத்தில் ஏற்பட்ட பொருள் சேதங்களின் இழப்புத் தொகையை ஆய்வு செய்து, திரட்டுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எச்.எஸ்.கெம்பண்ணா தலைமையிலான ஆணையரை கா்நாடக உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவரும், பெங்களூரு நகர முன்னாள் மேயருமான சம்பத் ராஜை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : bengaluru
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT