புது தில்லி: தலைநகர் புது தில்லியில் வெள்ளிக்கிழமை காலை மைனஸ் 7.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத நவம்பர் மாத குளிர் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் குளிர்நிலையானது மைனஸ் 10 டிகிரிக்கும் கீழ் குறைந்து, இரண்டு நாள்களுக்கு இதே நிலை நீடித்தால்தான் கடுங்குளிர் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.
இந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில், நவம்பர் மாதத்தில் இன்று பதிவான மைனஸ் 7.4 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவே மிகக் குறைவானதாக உள்ளது.
தில்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் 11.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. 2018ல் 10.5 டிகிரி செல்சியஸும், 2017ல் 7.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்ததுமே, அந்த ஆண்டுகளில் நவம்பர் மாதங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.