இந்தியா

தில்லி: கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 4,550-ஆக அதிகரிப்பு

20th Nov 2020 04:56 PM

ADVERTISEMENT


தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 4,550-ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக தென்மேற்கு தில்லியில் 743 பகுதிகளும், குறைந்தபட்சமாக வடகிழக்கு தில்லியில் 148 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தில்லி அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 11 மாவட்டங்கள்  உள்ள நிலையில், அதில் 6 மாவட்டங்களில் 400க்கும் அதிகமான கட்டுப்பாட்டு மண்டலங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு தில்லியில் 743 பகுதிகளும், தெற்கு தில்லியில் 705, மேற்கு தில்லியில் 587, தென்கிழக்கு தில்லியில் 543, மத்திய தில்லியில் 490, வடமேற்கு தில்லியில் 445 பகுதிகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தில்லியில் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் 5 கரோனா தொற்று அதிகரித்து, நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக நவம்பர் 11-ஆம் தேதி 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை (அக்.18) கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதிகபட்சமாக 131 பேர் உயிரிழந்தனர். 

நேற்று (வியாழக்கிழமை) ஒரு நாளில் மட்டும் 7,546 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 5.1 லட்சமாக அதிகரித்துள்ளது. புதிதாக 98 பேர் பலியானதால் மொத்த உயிரிழப்பு 8,041-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT