கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,028 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 6028 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 5,51,670 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1969 ஆக உயர்ந்துள்ளது.
ADVERTISEMENT
இன்று ஒரே நாளில் 6,398 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,81,718 ஆக உள்ளது. தற்போது 67,831 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.