இந்தியா

மார்புத் தொற்று: சோனியா தில்லியிலிருந்து வெளியேற அறிவுறுத்தல்

20th Nov 2020 11:10 AM

ADVERTISEMENT

நாள்பட்ட மார்புத்தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில நாள்களுக்கு தில்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

காற்று மாசு அதிகரித்து வருவதால் தில்லியிலிருந்து வெளியேறி கோவா அல்லது சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு சோனியா காந்தி தங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்த தகவலில், இன்று பிற்பகலில் தில்லியிலிருந்து வெளியேறி ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தியுடன் சோனியா செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காற்று மாசுபாட்டிற்கிடையே மார்புத் தொற்று ஏற்பட்டதால் சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டு வருகிறார். 

ADVERTISEMENT

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் சோனியா காந்திக்கு ஆஸ்துமாவும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டிற்கும் சென்றார். அவருடன் ராகுல்காந்தியும் சென்றிருந்தார்.

இதனால் செப்டம்பர் 14 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இருவரும் பங்கேற்கவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோனியாகாந்தி கோவாவில் சில நாள்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT