இந்தியா

துங்கபத்ரா புஷ்கரம் திருவிழா இன்று முதல் தொடக்கம்

20th Nov 2020 04:05 PM

ADVERTISEMENT

 

கர்னூலில் துங்கபத்ரா புஷ்கரம் திருவிழாவை இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. 

12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் துங்கபத்ரா புஷ்கரம் விழா இன்று முதல் தொடர்ந்து 12 நாள்கள் (டிசம்பர் 1 வரை) நடைபெறுகிறது. 

இந்த புஷ்கர விழாவில் இந்திராகரன் ரெட்டி(சட்டம்), நிரஞ்சன் ரெட்டி(வேளாண்மை) மற்றும் வி.ஸ்ரீனிவாஸ் கௌட்(கலால்) ஆகிய அமைச்சர்கள் ஆற்றில் புனித நீராடி மகிழ்ந்தனர். 

ADVERTISEMENT

கரோனா தொற்று காரணமாக புஷ்கரத்தில் புனித நீராடவும், ஆலம்பூர் மற்றும் பிற இடங்களில் உள்ள கோயில்களைப் பார்வையிட விரும்பும் பக்தர்களுக்கு மாநில அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குள்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் புஷ்கரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புஷ்கருக்கு வரும் பக்தர்கள் கரோனா எதிர்மறை சான்றிதழ் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், பக்தர்கள் அனைவரும் வெப்ப சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். புஷ்கரத்தில் நீராட முகக்கவசம் அணிவது மற்றும் ஆறு அடி சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியமாகும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT