இந்தியா

பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் கண்டுபிடிப்பு

20th Nov 2020 02:43 PM

ADVERTISEMENT


பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பரிகோட் குண்டாய் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இந்த புராதான கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வுத் துறையின் கைபர் பக்த்ன்க்வா அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடவுள் விஷ்ணுவின் கோயிலாகும்.  இது இந்து சாஹி காலத்தில் அதாவது சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்து சாஹிக்கள் அல்லது காபூல் சாஸிக்களின் ஆட்சி காபூல் பள்ளதாக்கு (கிழக்கு ஆப்கானிஸ்தான்), கந்தாரா (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் தற்போதைய வடமேற்கு இந்தியப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இந்த அகழாய்வின் போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்களையும் தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கோயிலுக்கு அருகே ஒரு நீர்த்தொட்டியை கண்டுபிடித்திருக்கும் தொல்லியல் நிபுணர்கள், இதனை, கோயிலுக்குச் செல்லும் முன் இந்துக்கள் குளிக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட்டப்பட்ட பல கட்டட அமைப்புகள் முதல்முறையாக தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 

Tags : archaeological
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT