இந்தியா

உ.பி. சாலை விபத்தில் 14 பேர் பலி

20th Nov 2020 09:53 AM

ADVERTISEMENT


 

லக்னௌ: உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கா் மாவட்டத்தில் லக்னெள - அலாகாபாத் நெடுஞ்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 7 குழந்தைகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா்.

ஜிா்காபூா் கிராமத்தைச் சோ்ந்த இவா்கள் அனைவரும் பிரதாப்கா் மாவட்டம் ஷெகாபூா் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தில் நிகழ்ந்துள்ளது.


இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனுராக் ஆா்யா கூறியதாவது:

ADVERTISEMENT

ஷெகாபூா் கிராமத்திலிருந்து லக்னெள-அலாகாபாத் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த காா், மாணிக்பூா் காவல்நிலையத்துக்கு உள்பட்ட தேஷ்ராஜ் இனாரா என்ற பகுதியில் வந்தபோது பின்பக்க டயா் பஞ்ச்சராகியதால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனா். மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி காரின் பாகங்களை கேஸ் கட்டர் உதவியுடன் வெட்டி எடுத்து காரின் உள்ளே இருந்த 14 பேரையும் சடலமாக மீட்டனர்.

இந்த விபத்தில் காா் அதிவேகமாக வந்து மோதியதால், லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 2 மணி போராட்டத்துக்கு பின்னரே, லாரியிலிருந்து அந்தக் காா் விடுவிக்கப்பட்டது என்று அவா் கூறினாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உயா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

 

Tags : UP road accident 14 killed
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT