இந்தியா

5 நாள்களுக்குள் 2 ஏவுகணைகளின் சோதனை வெற்றி

17th Nov 2020 06:49 PM

ADVERTISEMENT

5 நாள்களுக்குள்ளாக 2ஆவது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றி கண்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான நவீன உடனடி எதிர்தாக்குதல் ஏவுகணை சோதனையில் திட்டமிடப்பட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.

வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட் 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட  க்யூ.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணை கடந்த 2 நாள்களுக்குள் 5ஆவது முறையாக சோதிக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. 

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இதே வகையிலான ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : missile
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT