இந்தியா

லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்கக் கட்டுப்பாடு

17th Nov 2020 07:29 PM

ADVERTISEMENT

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.397 கோடி வருவாய் இழப்பை அந்த வங்கி சந்தித்தது.

இதனையடுத்து நஷ்டத்தை தடுக்கும் விதமாக லட்சுமி விலாஸ் வங்கியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் டிசம்பர் 16ஆம் தேதி வரை தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.25000 மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் தற்காலிக நடவடிக்கை தான் எனத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி நிலைமை சீரான பிறகு மீண்டும் வழக்கமான செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : bank
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT