இந்தியா

திருமண நிகழ்ச்சிகளில் இனி 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி: தில்லி முதல்வர்

17th Nov 2020 01:36 PM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லியில் நடைபெறும் திருமணங்களில் இனி 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று கரோனா நிலவரம் குறித்துப் பேசிய அரவிந்த் கேஜரிவால், தில்லியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வந்ததால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

Tags : Delhi aravind kejriwal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT