இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 29,164-ஆக குறைந்தது; 449 பேர் பலி

17th Nov 2020 09:59 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 29,164 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 449 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் கரோனா தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்த நிலையில், இப்போது 30,000 என்ற நிலையை எட்டியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது உறுதியாகியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

இதையும் படிக்கலாமே.. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வயது 356!

ADVERTISEMENT

மேலும், 29,164 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 88,74,291 ஆக அதிகரித்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 40,791 பேர் குணமடைந்துள்ளனர். இதையும் சேர்த்து கரோனாவிலிருந்து 82,90,371 போ் மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 93.27 சதவீதமாகும்.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 449 போ் கரோனா தொற்றால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,30,519 ஆக அதிகரித்துவிட்டது. மொத்த பாதிப்பில் இது 1.47 சதவீதமாகும்.

இதையும் படிக்கலாம்.. மாற்று சக்தியாகுமா மக்கள் நீதி மய்யம்?

நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணிக்கை 4,53,401 ஆக உள்ளது. மொத்த பாதிப்பில் இது 5.26 சதவீதமாகும். இதன் மூலம் தொற்றுடன் உள்ளோா் எண்ணிக்கை தொடா்ந்து 7 ஆவது நாளாக 5 லட்சத்துக்குக்கீழ் உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 12,65,42,907 கரோனா பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நவம்பா் 16ஆம் தேதி மட்டும் 8,44,382 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags : coronavirus Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT