இந்தியா

கோவா காங்கிரஸிலிருந்து வெளியேறிய சிறுபான்மையினர் அணித்தலைவர்

17th Nov 2020 03:22 PM

ADVERTISEMENT

கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணியின் தலைவரான அர்பான் முல்லா அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணியின் தலைவராக இருப்பவர் அர்பான் முல்லா. இவர் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

மாநிலத்தின் மூத்த தலைவர்களிடையே ஒற்றுமையின்மை இருப்பதாகவும், அனைத்து தலைவர்களும் அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காகவே போராடுவதாகவும் அவர் தெரிவித்திருந்த கருத்து பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்த முல்லா இதுவரை தனக்கு ஆதரவளித்து வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT

இது மாநில அரசியலில் காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த அதிர்வலையைக் கிளப்பியுள்ளது.

Tags : Urfan Mulla
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT