இந்தியா

கான்பூர்: கூட்டு பலாத்காரம் செய்து சிறுமியின் நுரையீரலை பிடுங்கிய கொலையாளிகள்

17th Nov 2020 02:08 PM

ADVERTISEMENT

 

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த ஞாயிறன்று வனப்பகுயிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலை உடற்கூராய்வு செய்ததில், அவர் கூட்டு பலாத்காரம் செய்த கும்பல், சிறுமியைக் கொன்று நுரையீரலை வெளியே பிடுங்கி எடுத்தது தெரிய வந்துள்ளது.

சிறுமியின் நுரையீரலை பிடுங்கி எடுத்திருப்பதன் மூலம், மந்திரவாதிகள் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதும், இப்படி பூஜை செய்தால் பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என்ற மூட நம்பிக்கை மந்திரவாதிகள் மத்தியில் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கதம்பூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி தீபாவளி நாளன்று காணாமல் போயுள்ளார். இந்த கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அன்குல் குரில் (20), பீரன் (31) ஆகியோர், சிறுமியை கடத்திச் சென்று நுரையீரலைப் பிடுங்கி அதனை மந்திரவாதியான பரசுராம் குரிலிடம் அளித்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தில் பரசுராமும், அவரது மனைவியும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் விசாரணையில் பரசுராம் வழக்கை திசைதிருப்ப முயன்றதாகவும், தகுந்தபடி விசாரித்ததில், அழுதபடி தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறை ஏஎஸ்பி பிரஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணையில் பரசுராம் கூறியதாவது,1999-ஆம் ஆண்டு தனக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைப் பேறு இல்லை. அதனால், சிறுமியின் நுரையீரலை வைத்து பூஜை செய்தால் குழந்தை பிறக்கும் என்பதால், பூஜை செய்ய, சிறுமியின் நுரையீரல் வேண்டும் என்று உறவினர் அன்குல் மற்றும் நண்பர் பீரனிடம் கூறியதாகவும், அவர்கள் சொன்னபடியே சிறுமியின் நுரையீரலை எடுத்து வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

பட்டாசுகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை கடத்திய அங்குலும், பீரனும், அங்கிருக்கும் வனப்பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியை கொலை செய்யும் முன் இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிறுமியை காணாமல் தேடிய பெற்றோர், அதே வனப்பகுதியில் கையில் விளக்குடன் தேடிய போதும், இருட்டில் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, சிறுமியின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த போதுதான் சம்பவம் குறித்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
 

Tags : rape
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT