இந்தியா

கரோனா அச்சுறுத்தல்: சுய தனிமைப்படுத்தலில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்

17th Nov 2020 08:44 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றுடையவர்களுடன் தொடர்பில் இருந்ததால் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் தங்களை சுய தனிமையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் தங்களுடன் தொடர்பில் இருந்த உறவினருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களைத் தாமே சுய தனிமைபடுத்திக் கொள்வதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் உமர் அப்துல்லா,“மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வார காலத்திற்கு சுய தனிமையில் இருக்க உள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் குளிர் அதிகரித்துள்ளதால் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT