இந்தியா

ம.பி.யில் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

17th Nov 2020 06:27 PM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் பினா ஆற்றில் மூழ்கி 6 பேர் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ளது ரஹத்கர் அருவி. இந்த அருவிப் பகுதியில் உள்ள பினா ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் நீரில் மூழ்கி 6 பேர் பலியாகினர்.

பலியான அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. ஆற்றின் தடை செய்யப்பட்டப் பகுதியில் உணவு சமைக்கச் சென்ற அவர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய குழந்தை ஒன்று மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் சடலங்களை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : madhyapradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT