இந்தியா

விவசாய ஆராய்ச்சியில் "டிரோன்' பயன்பாட்டுக்கு அரசு அனுமதி

17th Nov 2020 06:05 AM

ADVERTISEMENT


மும்பை: ஹைதராபாதை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையத்துக்கு (இக்ரிசாட்), வேளாண் ஆராய்ச்சியில் ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதுகுறித்து மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆம்பெர் துபே கூறியிருப்பதாவது:

ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வேளாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட,  இக்ரிசாட் அமைப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி, இக்ரிசாட் அமைப்பின் "டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம்' திட்டம் (அலகு- 1) நிறைவேறும் வரை அல்லது ஆறு மாத காலத்துக்கு வழங்கப்படுகிறது. வேளாண்மை குறித்த தரவுகளைச் சேகரிக்க ஆளில்லா விமானங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். 

துல்லிய வேளாண்மை, வெட்டுக்கிளிகள் கட்டுப்பாடு, சாகுபடி அபிவிருத்தி ஆகிய வேளாண் துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு பெரும் பங்களிப்பை அளிக்கிறது. இளம் தொழில்முனைவோரும் ஆய்வாளர்களும் ஆளில்லா விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி நாட்டிலுள்ள 6.6 லட்சம் கிராமங்களில் வேளாண்மை மேம்பாட்டுப் பணிகளில்  ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT