இந்தியா

நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்காக தீபம் ஏற்றுவோம்- மோடி வேண்டுகோள்

14th Nov 2020 09:39 AM

ADVERTISEMENT


புதுதில்லி: நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளியன்று  நாட்டு மக்கள் தங்களது இல்லங்களில் தீபம் ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! இந்த திருவிழா அனைவருக்கும் பிரகாசத்தையும் மகிழ்ச்சியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்" என்று கூறியுள்ளார். 

மேலும் எல்லைகளில் நமது தேசத்தைக் காக்க தைரியத்துடன் போராடும் ராணுவ வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். எனவே நமது வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த தீபாவளி அன்று அனைவரும் தமது இல்லங்களில் தீபம் ஏற்றுவோம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ADVERTISEMENT

"நம் தேசத்தை அச்சமின்றி பாதுகாக்கும் வீரர்களுக்கு வணக்கம். நமது வீரர்களின் தைரியத்திற்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளால் மட்டும் முடியாது.  எல்லையில் உள்ள வீரர்களின் குடும்பங்களுக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து செய்தியுடன் சமீபத்திய 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் தீபம் ஏற்றுவதற்கான அழைப்பு விடுத்த குரல் பதிவையும்   டிவிட்டர் பதிவில் இணைத்துள்ளார். 

அனைத்து படை வீரர்களும், கரோனா தடுப்புப் பணியில் உள்ள முன்னணி பணியாளர்களும் தங்கள் அன்புக்குரிய குழந்தைகள், குடும்பத்தினருடன் தீபாவளி  திருவிழாவைக் கொண்டாட வீட்டில் இல்லை என்றாலும், ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்காக பிராத்திக்கும் என்று மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT