இந்தியா

தீபாவளி: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

14th Nov 2020 11:02 AM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையை நாடு முழுவதும் இன்று மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த ஆண்டும் மக்கள் தீபாவளிப் பண்டிகையை வீடுகளிலேயே சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளிப் பணிடிகையையொட்டி அதிகாலை முதலே மக்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

ஒரு சில பகுதிகளில் மக்கள் புத்தாடை அணிந்து தீபாவளிப் பண்டிகைக்கு கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனை வணங்கினர்.

ADVERTISEMENT

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வீடுகளில் செய்த இனிப்பு வகைகளை பகிர்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களிலிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் தங்களது குடும்பத்தாருடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் கூடுதல் உற்சாகத்துடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க அந்தந்த மாநிலங்கள் விதித்துள்ள நேரத்தில் கட்டுப்பாடுகளுடன் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தில்லி, மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம் உள்பட நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Tags : Diwali
ADVERTISEMENT
ADVERTISEMENT