இந்தியா

இந்தியா பதிலடி: 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

13th Nov 2020 04:50 PM

ADVERTISEMENT

இந்திய எல்லைப் பகுதியான உரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 முதல் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதியான உரி செக்டார் முதல் குரெஸ் செக்டார் வரை பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரு வேறு இடங்களில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பொதுமக்கள் மூன்று பேர் பலியாகினர். பூஞ்ச் மாவட்டத்தின் சவ்ஜியான் பகுதியில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், இது குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும், நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 முதல் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பலியான பாகிஸ்தான் ராணுவ வீரர்களில், பாகிஸ்தான் ராணுவ சிறப்புப் படை வீரர்களும் அடங்குவர் என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

 

Tags : India pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT