இந்தியா

லக்னௌவில் போலி மதுபானம் குடித்த 3 பேர் பலி

13th Nov 2020 04:33 PM

ADVERTISEMENT

லக்னௌவில் போலி மதுபானம் குடித்த 3 பேர் மரணமடைந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள பாந்தரா பகுதியில் நேற்று மாலை போலி மதுபானம் குடித்த 5 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சுந்தர் லால் (35), அக்கி (30), ராஜ்குமார் (32) ஆகியோர் அருகிலிருந்த மருத்துமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் அவர்கள் மருத்துவமனையிலேயே இரவு இறந்துவிட்டனர். மற்ற இருவர் தருமா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலி மதுபானம் விற்றவர் தலைமறைவாகிவிட்டார். 

பிரேத பரிசோதனைக்கு பிறகே அதிக மதுபானம் குடித்ததால் இறந்தார்களா அல்லது நச்சு மதுபானம் குடித்ததால் இறந்தார்களா என்பது தெரியவரும் என்று இணை ஆணையர் சோமன் பார்மா தெரிவித்துள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : Lucknow
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT