இந்தியா

கரோனா: தில்லியில் மூன்றாவது அலை வீசுகிறதா?

13th Nov 2020 11:23 AM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லியில் தற்போது கரோனா பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தினசரி கரோனா பலி எண்ணிக்கை வியாழக்கிழமையன்று 100 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மட்டும் புதிதாக 7,332 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா பாதித்தவர்களில் 104 பேர் பலியாகியுள்ளனர்.

தில்லியில் கரோனா மிகத் தீவிரமாக இருந்த நிலையில்கூட இதுவரை 100-ஐ எட்டியிராத நிலையில், தற்போது தில்லியில் கரோனா பலி நூறை கடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்ப ஜூன் 16-ம் தேதி கரோனா பாதித்த 93 பேர் பலியாகியிருந்ததே அதிகபட்ச ஒருநாள் பலி எண்ணிக்கையாக இருந்தது.

புதன்கிழமை தில்லியில் புதிதாக 8,593 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை 7,053 ஆக இருக்கிறது. 

ADVERTISEMENT

தில்லியில் கடந்த சில நாள்களாகவே கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 70 - 80 ஆக இருந்து வருவது, தில்லியில் கரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை வீசுகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தில்லியில் நேற்று ஒரே நாளில் 6,462 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியதை அடுத்து, இதுவரை அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,16,580 ஆக உயர்ந்துளள்து.
 

Tags : coronavirus delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT