இந்தியா

தெலங்கானாவில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

13th Nov 2020 01:25 PM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி, புதிதாக 997 பேர் வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 2,55,663 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதித்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,222 ஆக உயர்ந்துள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,37,172 ஆகும்.  இதையடுத்து மீட்பு விகிதம் விகிதம் 92.75 சதவீதமாக உள்ளது. 

ADVERTISEMENT

தற்போது மருத்துவமனையில் 17,094 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதித்து 4 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,397 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானாவில் இதுவரை மொத்தம் 48.12 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT